திருச்சி, மே 22: திருச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில், முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பாரத முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் 32வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்சி ஜங்ஷன் காதிகிராப்ட் அருகில் உள்ள ராஜிவ்காந்தி சிலைக்கு மாநகர் மாவட்டத் தலைவர் ஜவகர் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு என்கிற லெனின் பிரசாத், மாவட்ட பொருளாளர் ராஜா நசீர், மாநில பொதுச்செயலாளர் முரளி, வக்கீல் இளங்கோ, தொட்டியம் சரவணன், மாவட்ட துணைத்தலைவர் வில்ஸ் முத்துக்குமார், கவுன்சிலர்கள் சுஜாதா, ரெக்ஸ், கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம், ரவி, ஜோசப் ஜெரால்டு, பிரியங்கா, பட்டேல், செல்வகுமார், மாவட்ட பொதுச் செயலாளர்கள் சிவா உறையூர் எத்திராஜூ, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post 32வது நினைவு தினம் ராஜிவ்காந்தி சிலைக்கு காங்கிரசார் மரியாதை appeared first on Dinakaran.