திருநெடுங்களநாதர் கோயில் உள்பகுதியில் கல்தளத்தில் குளிரூட்டும் வெள்ளை வர்ணம் பூசும்பணி

 

திருவெறும்பூர், மே 22: திருவெறும்பூர் அருகே உள்ள திருநெடுங்களநாதர் கோயில் உள்பகுதியில் பக்தர்கள் வசதிக்காக கல் தளத்தில் குளிரூட்டும் வெள்ளை வண்ணம் கோயில் நிர்வாகம் சார்பில் அடிக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்களநாதர் கோயில் இடர்களையும் பதிகம் பாடல் பெற்ற உலக புகழ் பெற்ற திருத்தலம் ஆகும். இங்கு இறைவன் நித்திய சுந்தரேஸ்வரர் ஆகவும், இறைவி மங்களாம்பிகை ஆகவும் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். பக்தர்கள் தங்களது துன்பம், துயர் நீங்க நெடுங்கலநாதர் கோயிலுக்கு வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்து வழிபாடு செய்வதோடு, நேர்த்திக் கடனையும் செலுத்தி வருகின்றனர்.

தற்பொழுது கோடைகாலம் மற்றும் கத்திரிவெயில் சுட்டெரிப்பதால் கோயில் உள்வளாகத்தில் கல்தளம் சூடேறி பக்தர்கள் அதில் நடக்க முடியாமல் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து கோயில் சிவாச்சாரியார்கள் சோமசுந்தரம், ரவி, ரமேஷ் ஆகியோர் கோயில் செயல்அலுவலர் வித்யாவிடம் கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் கோயில் செயல் அலுவலர் வித்யா திருநெடுங்களநாதர் கோயில் உள் வளாக கல் தளத்தில் தரிசனம் செல்லும் பக்தர்களின் பாதங்கள் சூடேறாமல் செல்வதற்கு வசதியாக வெப்பத்தை குறைத்து குளிரூட்டும் பெயிண்ட் அடிக்க உத்தரவிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post திருநெடுங்களநாதர் கோயில் உள்பகுதியில் கல்தளத்தில் குளிரூட்டும் வெள்ளை வர்ணம் பூசும்பணி appeared first on Dinakaran.

Related Stories: