திருச்சியில் தூய்மை தொழிலாளர் நலச்சங்க கூட்டம்

 

திருச்சி, மே 22: திருச்சியில் நடைபெற்ற தூய்மை தொழிலாளர்கள் நல சங்க கூட்டத்தில் சங்கத்தின் ஆறாவது மாநில மாநாடு திருச்செந்தூரில் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.திருச்சியில் தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாநிலத்தலைவர் விருதுநகர் சக்திவேல் தலைமை வகித்தார். மாநில செயலாளர் முருகேசன் வரவேற்று பேசினார். ஆலோசனை கூட்டத்தில் திருச்செந்தூரில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை தொழிலாளர்கள் பங்கேற்கும் தூய்மை தொழிலாளர்களின் தேசம் காக்கும் பேரணி மற்றும் 6வது மாநில மாநாடு இந்தாண்டு நடத்துவது குறித்து ஆலோசனை நடந்தது. இதில் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், தமிழகஅரசு நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 500 தூய்மை பணியாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.11 லட்சத்தில் வீடு கட்டும் திட்டம் வழங்கியதற்கும், முழு உடல் பரிசோதனை செய்வதற்கு உத்தரவிட்டதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனைத்தொடர்ந்து நடந்த கூட்டத்தில், தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி பணியை நிரந்தப்படுத்த வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி மாதஊதியம் ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும், தூய்மை தொழிலாளர்களுக்கு தனி நிதிநிலையை உருவாக்க வேண்டும், மாத சிறப்பு ஊதியம் மற்றும் சிறப்பு ஒட்டுமொத்த பணப்பலனை உயர்த்தி வழங்க வேண்டும், தமிழக அரசின் இலவச திட்டங்களை வழங்க வேண்டும், அரசு விடுமுறை நாட்களில் விடுமுறை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாடு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் சண்முகம் நன்றி கூறினார்.

The post திருச்சியில் தூய்மை தொழிலாளர் நலச்சங்க கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: