பாடாலூர் அருகே தெரணியில் ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா

 

பாடாலூர், மே22: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் வட்டார வள மையம் சார்பில் தெரணி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா நேற்று நடைபெற்றது.
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வழியில் மாற்ற கோடை கொண்டாட்டமாக ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.இதன்படி, தெரணி கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். தொடக்கப்பள்ளியின் பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் தேவி முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில், மந்திரமா? தந்திரமா? கணிதம் சார்ந்த விளையாட்டு, எளிய அறிவியல் சோதனைகள், கதை – கற்பனை விளையாட்டுகள் ஆகிய தலைப்புகளில் தண்ணீரில் குண்டூசி மிதத்தல், பிறந்தநாள் தேதி கண்டுபிடித்தல், புள்ளி வைத்து வரைதல் விளையாட்டு, பலூனை நேராக நிற்க வைத்தல், நூலின் மூலம் ஒலிப் பரிமாற்றம், கதை சொல்லி முடித்து வைத்தல், நமக்குத் தெரிந்த இடங்களைப் படம் மூலம் வரைதல், செய்தித்தாள்களைக் கொண்டு விதவிதமான தொப்பிகளைச் செய்தல், கைரேகை மூலம் படம் உருவாக்குதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், கிராம பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். கருத்தாளராக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ரம்யா, நிர்மலா ஆகியோர் செயல்பட்டனர்.

The post பாடாலூர் அருகே தெரணியில் ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: