கள்ளச்சாராயம், மதுவிற்பனை குறித்து வாட்ஸ்அப்பில் மக்கள் புகார் தெரிவிக்கலாம்

 

சேலம், மே 22: கள்ளச்சாராயம், மதுவிற்பனை குறித்து வாட்ஸ் அப்பில் பொதுமக்கள்புகார் அளிக்கலாம்என்று மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சேலம் மாவட்ட எஸ்பி சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அண்டை மாவட்டங்களில் நடைபெற்ற சம்பவத்தினை கருத்தில் கொண்டு உயர் அதிகாரிகளின் ஆணைக்கிணங்க சேலம் மாவட்டத்தில் இதுதொடர்பாக உரிய நடவடிக்கைகள், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் சமீப காலமாக சில விரும்பத்தகாதவர்கள் பழைய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுத்து ஏதோ தற்போது தான் நடைபெறுவது போல சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனர்.

இதனால் மக்களிடையே குழப்பமும் பீதியும் ஏற்படுகிறது. எனவே, சேலம் மாவட்டத்தில் இதுபோன்று சித்தரிக்கப்பட்ட பழைய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை உண்மை தன்மையின்றி வெளியிடுபவர்கள் மீது போதிய விசாரணை நடத்தி சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் கள்ளச்சாராயம் மற்றும் மது விற்பனை குறித்து 94899 17188 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டோ அல்லது வாட்ஸ் அப் மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விபரம் ரகசியம் காக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post கள்ளச்சாராயம், மதுவிற்பனை குறித்து வாட்ஸ்அப்பில் மக்கள் புகார் தெரிவிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: