கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

 

கிருஷ்ணகிரி, மே 22: கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சரவணன், தர்மபுரி மாவட்டம், அரூர் காவல் உட்கோட்டம் கோட்டப்பட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, அவருக்கு பதிலாக, நாமக்கல் மாவட்டம் எலச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த குலசேகரன், கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், 1999ம் ஆண்டு எஸ்ஐயாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் சேர்ந்தார். பின்னர், தர்மபுரி மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்தார். அதனைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று, கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்காடு காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்தார். இதையடுத்து, சேலம் மாவட்டத்திலும், நாமக்கல் மாவட்டத்திலும் பணிபுரிந்தவர், தற்போது கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.

 

The post கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Related Stories: