ஒரே கிராமத்தில் 10க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல்

 

வேப்பூர், மே 20: விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் பொதுமக்கள் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் புதுச்சேரி தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளின் சிகிச்சை பெற்று வருபவர்களில் சுமார் 10க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் மங்கலம்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பாலச்சந்தர் தலைமையில் மருத்துவர்கள் ராமநாதன், ஜெயகோபி, பிரதாப் மற்றும் மருத்துவ குழுவினர் முகாமிட்டு அப்பகுதியில் பொது மக்களுக்கு பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளித்தனர்.

விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலர் தண்டபாணி, கடலூர் மாவட்ட மலேரியா அலுவலர் கஜபதி, மாவட்ட இளநிலை பூச்சியில் வல்லுநர் மூர்த்தி ஆகியோர் முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் முருகவேல், ஐயப்பன், அவினாஷ், பரத்ராஜ்குமார், முல்லைநாதன் உள்ளிட்ட சுகாதாரக் குழுவினர் டெங்கு பாதிக்கப்பட்ட நபர்களின் வீடுகள் மற்றும் தெருவில் ஆய்வு செய்து கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை பார்வையிட்டு புழுக்களை அழித்தனர். மேலும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

The post ஒரே கிராமத்தில் 10க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் appeared first on Dinakaran.

Related Stories: