திருச்சியில் ராஜீவ்காந்தி நினைவு ஜோதிக்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு

திருச்சி, மே 20: கர்நாடகாவில் இருந்து பெரும்புதூருக்கு கொண்டுசெல்லப்படும் ராஜீவ்காந்தி நினைவுஜோதிக்கு திருச்சியில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 32ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கர்நாடகாவில் இருந்து பெரும்புதூர் வரை ராஜீவ்காந்தி நினைவு ஜோதி மறைந்த பெங்களூர் பிரகாசம் குழுவினர்கள் துரைவேலன், பாரதி ஆகியோர் தலைமையில் புறப்பட்டு நேற்று திருச்சி வழியாக சென்றது. அப்போது மதியம் 1.30 மணியளவில் திருச்சி ஜங்ஷன் எதிரில் உள்ள ராஜீவ்காந்தி திருவுருவ சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ராஜீவ்காந்தி நினைவு ஜோதியை வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் கோவிந்தராஜ் மற்றும் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் வக்கீல் சரவணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மோகனாம்பாள் மாவட்ட துணை தலைவர் வில்ஸ் முத்துக்குமார். கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம், ரவி, ஜோசப் ஜெரால்டு, செல்வகுமார், ராஜா டேனியல் ராஜ், பிரியங்கா பட்டேல், பிரேம், கனகராஜ், மாவட்ட பொதுச் செயலாளர்கள் பட்டேல், அனந்த பத்மநாபன், சிவா, சரவண சுந்தர், முன்னாள் கோட்ட தலைவர் ஆனந்தராஜ், மாநகர மாவட்ட மகளிர் அணி தலைவி ஷீலாசெலஸ், வடக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி செல்வி, அகிலாம்மாள், சிறுபான்மைபிரிவு தலைவர் சுபேர், ஷேக் இப்ராகிம், நகர தலைவர் அருணாச்சலம் ஆர்டிஐ மாவட்ட தலைவர் முகுந்தன், மாவட்ட பொது செயலாளர் ஞானகுரு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post திருச்சியில் ராஜீவ்காந்தி நினைவு ஜோதிக்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: