சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

 

கிருஷ்ணகிரி, மே 20: கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், 39வது அமைப்பு தின கொடியேற்றம் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டியை சத்துணவு அமைப்பாளர்களே வழங்கக்கோரி, முதல்வரின் கவன ஈர்ப்பு பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றியத் தலைவர் மதியழகன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் மஞ்சுளா கொடியேற்றி, கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார்.

நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் மாநில துணை தலைவர் வெங்கடேசன் வாழ்த்தி பேசினார். ஒன்றிய பொருளாளர் நீலா நன்றி கூறினார். உணவுப் பொருட்களின் இருப்பிற்கு உத்தரவாதம் இல்லாத காரணத்தால், காலை சிற்றுண்டி வழங்கும் நபரிடம், மையத்தின் சாவியை ஒப்படைப்பதில்லை என்பதை முதல்வருக்கு தெரிவிக்கும் வகையில், ஆர்ப்பாட்டம் நடந்தது. தேன்கனிக்கோட்டை: கெலமங்கலம் ஒன்றிய அலுவலகம் முன்பு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், ஆனந்த லட்சுமி தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சீனிவாசன் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் முருகேசன் வாழ்த்துரை வழங்கினார்.

மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம், ராஜண்ணா, ரிஸ்வான், சாந்தி, அஸ்வத் நாராயணன், ஜெயா ஆகியோர் கலந்து கொண்டனர். வேப்பனஹள்ளி: வேப்பனஹள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே, கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் நாச்சியப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் முனுசாமி கோரிக்கை விளக்கவுரை நிகழ்த்தினார். மாவட்ட தலைவர் மணி நிறைவுரை நிகழ்த்தினார். சரவணன், செல்வகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அனுராதா நன்றி கூறினார்.

The post சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: