மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

 

ஓசூர், மே 20: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம், காமராஜர் காலினியில் உள்ள ஆந்திர சமிதியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமை வகித்தார். கொள்கை பரப்பு குழு துணை செயலாளர் ஆரணி அன்புவாணன் முன்னிலை வகித்தார். இதில் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ கலந்துகொண்டு பேசுகையில், ‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

மேற்கு மாவட்ட பகுதியில் தொய்வின்றி உடனடியாக உறுப்பினர் சேர்க்கையை முடிக்க வேண்டும்,’ என்றார். இக்கூட்டத்தில் திமுக புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் மேயர் சத்யா, மாவட்ட துணை செயலாளர்கள் முருகன், முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி, புஷ்பா சர்வேஷ், பொருளாளர் சுகுமாறன், தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: