மானியத்தில் பவர் டில்லர் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

 

கிருஷ்ணகிரி, மே 20: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், விவசாயிகளுக்கு மானிய விலையில் 77 பவர் டில்லர் வழங்க ரூ.65.45 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. அதன்படி, பொது பிரிவினருக்கு 58, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய பிரிவினருக்கு 19 என மொத்தம் 77 பவர் டில்லர் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. சிறு மற்றும் குறு விவசாயிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும், இதர பிரிவினருக்கு 40 சதவீத மானியமும் வழங்கப்படவுள்ளது. மேலும், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவில் சிறு,குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படவுள்ளது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராம ஊராட்சிகளில் உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதன் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள், விண்ணப்பத்துடன் சிட்டா, அடங்கல், நிலத்தின் வரைபடம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் கார்டு நகல் மற்றும் வங்கி பாஸ்புக் நகல் ஆகியவற்றுடன், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் சிவகுமார் மற்றும் ஓசூர் ராயக்கோட்டை ரோடு, சானசந்திரம், வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் செல்வம் ஆகியோரை தொடர்பு கொண்டு, விண்ணப்பங்களை அலுவலகத்தில் நேரடியாக கொடுத்து பயனடையலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post மானியத்தில் பவர் டில்லர் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: