திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கணக்கில் காட்டாமல் மறைத்து 750 லட்டுகள் முறைகேடாக விற்பனை

திருமலை: திருப்பதிக்கு வரக்கூடிய பக்தர்கள் கட்டாயம் லட்டு பிரசாதம் வாங்கி செல்வது வழக்கம். இதனால் பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் லட்டு பிரசாதம் வழங்குவதற்காக தேவஸ்தானம் சார்பில் தினந்தோறும் 3.50 லட்சம் லட்டுகள் தயார் செய்து பக்தர்களுக்கு விற்பனை செய்து வருகிறது. சுவாமி தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்கக் கூடிய நிலையில் கூடுதலாக பெற விரும்பும் பக்தர்களுக்கு ஒரு லட்டு ரூ.50 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. லட்டு பிரசாதமாக தயார் செய்யப்பட்டு, ஒரு டிரேவில் 50 லட்டுகள் வீதம் வைத்து மீண்டும் கோயிலுக்கு வெளியே உள்ள கவுண்டருக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் கோயிலுக்குள் தயாரிக்கும் லட்டு பிரசாதங்களை கணக்கில் காண்பிக்காமல் 15 டிரேவில் இருந்த 750 லட்டுகளை முறைகேடாக விற்பனை செய்து வந்துள்ளனர். இந்த விவகாரம் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் கண்காணிப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் தேவஸ்தான ஊழியர் மற்றும் ஒப்பந்த ஊழியர் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை பிடித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கணக்கில் காட்டாமல் மறைத்து 750 லட்டுகள் முறைகேடாக விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: