பேரழிவை நோக்கி பாகிஸ்தான் செல்கிறது: முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை

லாகூர்: பேரழிவை நோக்கி பாகிஸ்தான் விரைவாக சென்று கொண்டுள்ளதாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் லாகூரிலுள்ள ஜமான் பார்க் இல்லத்தில் வசித்து வருகிறார். அவர் தனது வீட்டுக்குள் மறைத்து வைத்திருக்கும் தீவிரவாதிகளை 24 மணி நேரத்துக்குள் ஒப்படைக்கும்படி நேற்று முன்தினம் பஞ்சாப் மாகாண அரசு கெடு விதித்து உத்தரவிட்டது. தொடர்ந்து அவர் வீட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதனால் இம்ரான் கான் மீண்டும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், இம்ரான் கான் வௌியிட்டுள்ள விடியோ பதிவில், “பாகிஸ்தான் உடனடி பேரழிவை நோக்கி விரைவாக சென்று கொண்டுள்ளது. பாகிஸ்தான் ஜனநாயக இயக்க தலைவர்களும், லண்டனில் தலைமறைவாக இருக்கும் நவாஸ் ஷெரீப்பும் பாகிஸ்தானின் அழிவை பற்றி கவலைப்படவில்லை. தாங்கள் கொள்ளையடித்த செல்வங்களை காப்பாற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். பேரழிவிலிருந்து பாகிஸ்தானை காப்பாற்ற விரைவில் தேர்தலை நடத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

The post பேரழிவை நோக்கி பாகிஸ்தான் செல்கிறது: முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: