டெல்லி: மே 21ம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாடு வருகிறார். தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி தேர்தல் பிரசாரம் செய்ய வருகை தந்தார். அப்போது பிரசார மேடை அருகே தணு என்ற மனித வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து மே 21ம் தேதி ராஜீவ் காந்தியின் நினைவு நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வரும் 21ம் தேதி தமிழ்நாடு வருகிறார்.
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இதன் பதவியேற்பு விழா நாளை மறுநாள் (மே 20) அன்று நடைப்பெறுகிறது. கர்நாடக முதல் அமைச்சராக சித்தராமையாவும் துணை முதல்வராக டி.கே சிவகுமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த பதவி ஏற்பு விழாவில் பிற்பகல் 12:30 மணிக்கு கலந்து கொள்ளும் ராகுல் காந்தி அதன் பிறகு சென்னை வருகிறார். ராஜீவ் காந்தியின் நினைவுநாளில் ஸ்ரீபெரும்புதூர் சென்று நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்துகிறார். இதற்கான முன்னேற்பாடுகளை காங்கிரஸ் கட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
The post மே 21ம் தேதி தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி: ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்..! appeared first on Dinakaran.
