இயற்கை அழகு!

*பாலேடு, கடலைமாவு இந்த இரண்டுடன் வெள்ளரி, உருளைக்கிழங்கு சேர்த்து அரைத்து முகத்துக்கு பேக் போட வேண்டும். இது முகத்தை புத்துணர்வாக ஆக்கும். அதோடு சுத்தமாகவும், மென்மையாகவும் பாதுகாக்கும். உருளைக்கிழங்கு கண்களின் கருவளைய பிரச்னையைக் கூட நீக்கும்.
*முகம் வசீகரம் பெற்று சுருக்கங்களின்றி பொலிவடைய வேண்டுமா? டீ தூளுடன் சிறிது சர்க்கரை கலந்து முகத்தின் மீது மென்மையாகத் தேய்க்க வேண்டும். இதனால் தோல் துவாரம் அழுக்குகள் நீங்கி சுத்தமாகிறது. சுருக்கங்கள் நீங்க இதை பதினைந்து நிமிடம் முகத்திலேயே வைத்து பிறகு வெது வெதுப்பான நீரில் கழுவ சுருக்கம் விருட்டென விடை பெற்று விடும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்யவும். குறிப்பாக பருக்கள் சருமம் கொண்டோர் தவிர்க்கவும்.
*கோதுமைமாவு, முட்டையின் வெள்ளைக்கரு இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து அதில் ஒரு துளி தேன் கலந்து பூச வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். சரும துவாரங்கள் இறுகி, இளமையான அழகு கிடைக்கும்.
*பப்பாளிப் பழத்தை மசித்து அதனுடன் வைட்டமின் ஈ எண்ணெய் கலந்து முகத்தில் பூச வேண்டும்.
*கற்றாழை ஜெல், வைட்டமின் ஈ மற்றும் அரிசி ஊறவைத்த நீர் மூன்றையும் கலந்து பேஸ்ட் போல் பூசி முகம் கழுவ சுருக்கங்கள் நீங்கி, இறந்த செல்கள் இல்லாமல் தூய்மையான சருமம் கிடைக்கும்.
*கற்றாழை ஜெல்லை முகம், முடி, கைகள், கால்கள் என பூசி ஊறவைத்துக் குளிக்க சருமத்திற்குத் தேவையான புத்துணர்வு கிடைக்கும். மேலும் தலையில் பொடுகு, இறந்த செல்கள் உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பினும் அதுவும் தீரும். நன்கு தூக்கம் வரவும் இந்த கற்றாழை உதவும்.
– ஆர். ஜெயலெட்சுமி

The post இயற்கை அழகு! appeared first on Dinakaran.

Related Stories: