பீட்ரூட் ஐஸ் கிரீம்

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் – 300 கிராம்
இஞ்சி – 25 கிராம் (நறுக்கியது)
எலுமிச்சைச் சாறு – 1 டீ ஸ்பூன்
பால் – 90 மிலி
ப்ரெஷ் கிரீம் – 250 மிலி
வெணிலா எசன்ஸ் – 10 சொட்டு
சர்க்கரை- 75 கிராம்

செய்முறை:

பீட்ரூட் மற்றும் இஞ்சியை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து ஜூஸ் எடுக்க வேண்டும். பின்பு அதை வடிகட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ப்ரெஷ் கிரீமை சேர்த்து நன்றாக பீட் செய்யவும். அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து பீட் செய்து, திக்கான பீட்ரூட் ஜூஸ், பால், வெணிலா எசென்ஸ் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். அதை ஒரு ஐஸ்கிரீம் அச்சு அல்லது கண்ணாடி பாத்திரத்தில் ஊற்றி 3 மணி நேரம் பிரீசரில் வைக்கவும். பின்னர் அதை எடுத்து மீண்டும் பீட் செய்து பிரீசரில் 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை வைக்கவும். பிறகு அதில் முந்திரி, பாதாம், தேன் சேர்த்தால் சுவையான பீட்ரூட் ஐஸ்கிரீம் ரெடியாகிவிடும்.

The post பீட்ரூட் ஐஸ் கிரீம் appeared first on Dinakaran.