யானை–கள் கணக்–கெ–டுப்பு பணி இன்று துவக்–கம்

ஓசூர், மே 17: கிருஷ்–ண–கிரி மாவட்–டம் ஓசூர் வனக்–கோட்–டத்–தில் இன்று(17ம் தேதி) முதல் வரு–கிற 19ம் தேதி வரை மூன்று நாட்–களுக்கு யானை–கள் கணக்–கெ–டுப்பு பணி நடை–பெ–று–கி–றது. கிருஷ்–ண–கிரி மாவட்–டத்–தில் 1,501 சதுர கி.மீ., பரப்–ப–ள–வுள்ள ஓசூர் வனக்–கோட்–டத்–தில் 1,190 சதுர கி.மீ., காவிரி வடக்கு மற்–றும் தெற்கு வன உயி–ரின சர–ணா–ல–யங்–கள் அமைந்–துள்–ளன. இப்–ப–கு–தி–யில் 468 வகை–யான தாவ–ரங்–கள், 36 வகை–யான பாலூட்–டி–கள், 272 வகை–யான பறவை இனங்–கள், 172 வகை வண்–ணத்–துப்–பூச்–சி–கள் உள்–ளன. அத்–து–டன், தேக்கு, ஈட்டி, சந்–த–னம், ஜாலாரி, உசில், ஆச்–சான் மற்–றும் பொருசு மர வகை–களும், யானை–கள், சிறுத்–தை–கள், காட்–டெ–ரு–மை–கள், புள்ளி மான்–கள், கட–மான், கர–டி–கள், மயில்–கள், எறும்–புத் தின்–னி–கள், அரி–ய–வகை விலங்–க–கு–ளான சாம்–பல் நிற அணில்–கள், எகிப்–திய கழு–கு–களும் உள்–ளன. ஓசூர் வனக்–கோட்–டத்–தில், காவிரி வடக்கு, தெற்கு வன உயி–ரின சர–ணா–ல–யங்–க–ளில் அதிக எண்–ணிக்–கை–யில் யானை–கள் உள்–ளன. குறிப்–பாக ஊடே–துர்க்–கம், சான–மாவு, நொக–னூர், அய்–யூர், ஜவ–ள–கிரி, பனை, உளி–பண்டா, மகா–ரா–ஜ–கடை, வேப்–ப–ன–ஹள்ளி, உடு–ப–ராணி, நாட்–றாம்–பா–ளை–யம், பிலி–குண்டு, உரி–கம், தக்–கட்டி, கெஸ்–தூர், மல்–ல–ஹள்ளி பகு–தி–யில் ஏரா–ள–மான யானை–கள் முகா–மிட்–டுள்–ளன. கடந்த 2017ம் ஆண்டு நடந்த ஒருங்–கி–ணைந்த யானை–கள் கணக்–கெ–டுப்–பில், ஓசூர் வனக்–கோட்–டத்–தில் மொத்–தம் 499 யானை–கள் இருப்–ப–தாக பதிவு செய்–யப்–பட்–டது.

நடப்–பாண்டு தமி–ழ–கம், கர்–நா–டகா, கேரளா, ஆந்–திர மாநி–லங்–க–ளில் ஒருங்–கி–ணைந்த யானை–கள் கணக்–கெ–டுப்பு பணி இன்று(17ம் தேதி) தொடங்கி வரும் 19ம் தேதி வரை மூன்று நாட்–கள் நடை–பெ–று–கி–றது. ஓசூர் வனக்–கோட்–டத்–தில் உள்ள 40 வனக்–கா–வல் சுற்று பீட்–க–ளில், ஓசூர் கென்–னத் ஆண்–டர்–சன் நேச்–சர் சொசைட்டி தன்–னார்வ தொண்டு நிறு–வ–னத்–தி–னர், வன அலு–வ–லர்–கள் உத–வி–யு–டன், காவிரி வடக்கு, தெற்கு வன உயி–ரின சர–ணா–ல–யங்–க–ளில், யானை–கள் கணக்–கெ–டுப்பு பணி நடத்த திட்–ட–மி–டப்–பட்–டுள்–ளது. இதை–ய–டுத்து, சத்–தி–ய–மங்–க–லம் புலி–கள் காப்–ப–கத்–தி–லி–ருந்து வந்த உயி–ரி–ய–லா–ளர் சக்–தி–வேல் மூலம், ஓசூர் வனக்–கோட்ட வன உயி–ரின காப்–பா–ளர் கார்த்–தி–கே–யனி தலை–மை–யில், உதவி வனப்–பா–து–கா–வ–லர் ராஜ–மா–ரி–யப்–பன், வனச்–ச–ரக அலு–வ–லர்–கள், வனப்–ப–ணி–யா–ளர்–களுக்கு, ஓசூர் மாவட்ட வன அலு–வ–ல–கத்–தில் கணக்–கெ–டுப்பு எடுப்–ப–தற்–கான பயிற்–சி–கள் அளிக்–கப்–பட்–டது. பணி–யில் ஈடு–ப–டு–ப–வர்–களை ஒன்–றி–ணைத்து, அவர்–களுக்கு வழி–காட்ட ஏது–வாக, வாட்ஸ் அப் குழு ஒன்–றும் உரு–வாக்–கப்–பட்டு, முத–லு–தவி பெட்–டி–கள் வழங்–கப்–பட்–டன. இந்த குழு–வி–னர் இன்று(17ம் தேதி) முதல் யானை–கள் கணக்–கெ–டுப்பு பணி–யில் ஈடு–பட்ட உள்–ள–னர்.

இத–னி–டையே கடந்த தமிழ்–நாடு முழு–வ–தும் வனத்–து–றை–யின் மூலம் இரண்டு கட்–டங்–க–ளாக பற–வை–கள் கணக்–கெ–டுப்பு பணி நடத்த திட்–ட–மி–டப்–பட்–டது. அதன்–படி, முதற்–கட்–ட–மாக காப்–புக் காடு–களுக்கு வெளி–யில் உள்ள ஈர நிலப்–ப–கு–தி–யி–லும், இரண்–டாம் கட்–ட–மாக காப்–புக்–காடு பகு–தி–க–ளி–லும் நடத்த திட்–ட–மி–டப்–பட்டு, முதற்–கட்–ட–மாக கிருஷ்–ண–கிரி மாவட்–டத்–தில் கடந்த ஜன–வரி மாதம் 29ம் தேதி காப்–புக் காடு–களுக்கு வெளி–யில் உள்ள ஈர நிலங்–க–ளான ராம–நா–யக்–கன் ஏரி, பாரூர் ஏரி, கே.ஆர்.பி. டேம், கெல–வ–ரப்–பள்ளி டேம், தளி ஏரி உள்–ளிட்ட 15 நீர் நிலை–க–ளில் கணக்–கெ–டுப்பு பணி நடந்–தது. இதில், 40க்கும் அதி–க–மான வன அலு–வ–லர்–கள், வனப்–ப–ணி–யா–ளர்–கள் மற்–றும் 50 தன்–னார்–வ–லர்–கள் கலந்து கொண்டு சுமார் 175க்கும் அதி–க–மான பறவை இனங்–களை அடை–யா–ளம் கண்டு பதிவு செய்–த–னர். இரண்–டாம் கட்–ட–மாக கடந்த மார்ச் மாதம் 4 மற்–றும் 5ம் தேதி–க–ளில் காப்–புக்–காடு பகு–தி–க–ளான காவிரி வடக்கு மற்–றும் தெற்கு வன உயி–ரின சர–ணா–லய பகு–தி–க–ளி–லும், காவிரி, சின்–னாறு நீர்ப்–பி–டிப்பு பகு–தி–கள் உள்ள உரி–கம் மற்–றும் அஞ்–செட்டி வனச்–ச–ர–கங்–க–ளில் 24 பீட்–டு–க–ளில் உள்ள காப்–புக்–கா–டு–க–ளில் கணக்–கெ–டுப்பு நடத்–தப்–பட்–டது. இதில், சுமார் 60க்கும் மேற்–பட்ட பறவை இனங்–கள் அடை–யா–ளம் கண்டு பதிவு செய்–த–னர் என்–பது குறிப்–பி–டத்–தக்–கது.

The post யானை–கள் கணக்–கெ–டுப்பு பணி இன்று துவக்–கம் appeared first on Dinakaran.

Related Stories: