எல்லம்மா தேவி கோயில் விழாவில் கிராம தேவதைகள் ஊர்வலம்

ஓசூர், மே 17: ஓசூர் அருகே எல்–லம்மா தேவி கோயில் விழா–வில் கிராம தேவ–தை–கள் ஊர்–வ–லம் நடை–பெற்–றது. இதில், திர–ளான பக்–தர்–கள் கலந்து கொண்டு வழி–பாடு நடத்–தி–னர். ஓசூர் அருகே உளி–யா–ளம் கிரா–மத்–தில், எல்–லம்மா தேவி கோயில் விழா நடை–பெற்–றது. ஒவ்–வொரு ஆண்–டும் சித்–திரை மாதத்–தில் எல்–லம்மா தேவி கோயில் விழா வெகு விமர்–சை–யாக நடத்–தப்–ப–டு–வது வழக்–கம். அவ்–வ–கை–யில் இந்த ஆண்டு திரு–விழா நேற்று முன்–தி–னம் தொடங்கி நடை–பெற்–றது. இதில், ஒவ்–வொரு நாளும் அம்–ம–னுக்கு சிறப்பு பூஜை–கள் செய்–யப்–பட்–டது. தொடர்ந்து ஓசூர் மற்–றும் சுற்–றுப்–புற பகு–தி–க–ளில் உள்ள கிராம தேவதை சிலை–கள் தாரை -தப்–பட்–டை–யு–டன் ஊர்–வ–ல–மாக எடுத்–து–வ–ரப்–பட்டு பூக்–க–ளால் அலங்–க–ரித்து ஆடல் -பாடல் நிகழ்ச்–சி–கள் நடத்–தப்–பட்–டது. இதில், காளி வேடம் அணிந்து நட–ன–மாடி வந்–தது பக்–தர்–களை பர–வ–சத்–தில் ஆழ்த்–தி–யது. அதே–போல், பாரம்–ப–ரிய கிரா–மிய மாறு வேடங்–க–ளில் கலை–ஞர்–கள் நெருப்பு சாக–சங்–கள் செய்து காண்–பித்–த–னர். நிறைவு நாளான நேற்று அம்–ம–னுக்கு கிடா வெட்டி நேர்த்–திக்–க–டன் செலுத்–தி–னர். அனை–வ–ருக்–கும் அன்–ன–தா–னம் வழங்–கப்–பட்–டது. விழா–வில் ஊர் மக்–கள் திர–ளாக பங்–கேற்று அம்–மனை தரி–ச–னம் செய்–த–னர்.

The post எல்லம்மா தேவி கோயில் விழாவில் கிராம தேவதைகள் ஊர்வலம் appeared first on Dinakaran.

Related Stories: