லா லிகா 2022-23: ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான வெற்றி அணிவகுப்பில் பார்சிலோனா..!!

லா லிகா எனப்படும் ஸ்பெயின் லீக் கால்பந்து ஆட்டத்தில் 27-வது முறையாக பட்டத்தை கைப்பற்றியுள்ள பார்சிலோனா அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். முன்னணி கிளப் அணிகளுக்கான லா லிகா கால்பந்து தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லிகா ஆட்டத்தில் எஸ்பான்யோல் கிளப் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணி வீழ்த்தியது. இதன் மூலம் ரியல் மாட்ரிட் உள்ளிட்ட எதிர் அணிகளை காட்டிலும் 14 புள்ளிகள் முன்னிலை பெற்று சாம்பியன் பட்டத்தை 27-வது முறையாக பார்கா அணி உறுதி செய்துள்ளது. இதையடுத்து சொந்த ஊரான பார்சிலோனாவில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பளித்தனர். திறந்தவெளி பேருந்தில் பார்சிலோனா மகளிர் அணியும் அழைத்து வரப்பட்டன.

The post லா லிகா 2022-23: ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான வெற்றி அணிவகுப்பில் பார்சிலோனா..!! appeared first on Dinakaran.

Related Stories: