கள்ளச்சாராய பலியில் எடப்பாடி அரசியல் செய்கிறார்: ஜவஹிருல்லா குற்றச்சாட்டு

தாம்பரம்: மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ நிருபர்களிடம் கூறியதாவது: மனிதநேய மக்கள் கட்சியின் சென்னை மண்டலம் சார்பாக வருகிற 21ம் தேதி மறைமலைநகரில் சமூகநீதி பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது. தமிழக அரசு முழு முயற்சி எடுத்து முற்றிலுமாக கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளச்சாராய பலி விவகாரத்தில் எடப்பாடி தேவையில்லாமல் அரசியல் செய்கிறார். ஏராளமான சாலை விபத்து, தற்கொலை இதற்கெல்லாம் முதலமைச்சர் ராஜினாமா செய்யவேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி பலநூறு முறை ராஜினாமா செய்திருக்க வேண்டும்’’ என்றார். மாநில துணை பொது செயலாளரும், தாம்பரம் மாநகராட்சி 50வது வார்டு மாமன்ற உறுப்பினருமான எம்.யாக்கூப், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தமுமுக, மமக தலைவர் எஸ்.கே.ஜாஹிர் உசேன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post கள்ளச்சாராய பலியில் எடப்பாடி அரசியல் செய்கிறார்: ஜவஹிருல்லா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: