டெல்லியில் பெண்கள் மட்டுமே ஓய்வு எடுக்கும் அழகிய “பிங்” பூங்காக்கள் 250 இடங்களில் அமைக்கப்பட உள்ளன. டெல்லியில் வார்டு வாரியாக 250 இடங்களில் “பிங்” பூங்காக்கள் அமைக்க டெல்லி மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சமீபத்திய கூட்டத்தில் இந்த திட்ட விரிவாக்கத்திற்கு முதல்வர் கெஜ்ரிவால் அனுமதி வழங்கி இருப்பதாகவும் பெண்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்தும் விதமாக இந்த பூங்காக்கள் இருக்கும் என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே டெல்லியில் சோதனை முயற்சியாக ரமா லீலா மைதானம் அருகே “பிங்” பூங்கா திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post டெல்லியில் பெண்களுக்காக 250 இடங்களில் “பிங்” பூங்கா மாநகராட்சி தகவல்..!! appeared first on Dinakaran.
