வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பிரசித்தி பெற்ற கெங்கை அம்மன் சிரசு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பிரசித்தி பெற்ற சிரசு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பம்கேற்று சிதறு தேங்காய் உடைத்தும் ஆடு, கோழி பலியிட்டும் நேர்த்தி கடனை செலுத்தினர்.

வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றான குடியாத்தம் சிரசு திருவிழா இன்று காலை முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள கெங்கை அம்மன் சிரசு திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் முதல் நாள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இன்று காலை கெங்கை அம்மன் சிரசானது அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது. பம்பை, உடுக்கை, சிலம்பாட்டம், புலியாட்டம் உள்ளிட்ட பாரமப்பரிய கலைகளுடன் நடைபெற்ற இந்த கெங்கை அம்மன் சிரசு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் வேலூர் மாவட்டமல்லாது அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர். கெங்கை அம்மன் சிரசானது நடுப்பேட்டை, காந்திரோடு, ஜவஹர்லால் தெரு வழியாக கோபாலபுரத்திலுள்ள கெங்கை அம்மன் ஆலயத்தை அடைந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

கெங்கை அம்மன் சிரசு திருவிழாவை ஒட்டி வேலூர் மாவட்டத்தில் 1,700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பிரசித்தி பெற்ற கெங்கை அம்மன் சிரசு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: