சிபிஎஸ்சிஇ 10ம் வகுப்பு தேர்வில் விஜயமங்கலம் பாரதி பள்ளி சிறப்பிடம்

 

பெருந்துறை: சிபிஎஸ்சிஇ 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், பெருந்துறை அடுத்த, விஜயமங்கலம், பாரதி இண்டர்நேஷனல் பள்ளி மாணவ மாணவிகள், அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்துள்ளனர். இப்பள்ளி மாணவி சம்ரித்திகா 500க்கு 484 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், கமல்பிரகாஷ் 481 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், பரணி 459 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.

தமிழ் பாடத்தில் கமல்பிரகாஷ், 100க்கு 100 மதிப்பெண்களும், சமூக அறிவியல் பாடத்தில் சம்ரித்திகா 100க்கு 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். மேலும், தேர்வு எழுதிய 30 மாணவர்களில் 18 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல்பெற்றுள்ளனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களையும், ஆசிரிய ஆசிரியைகளையும் பாரதி கல்வி அறக்கட்டளை தாளாளர் மோகனம்பாள், தலைவர் செந்தில்குமார், முதல்வர் உமாதேவி ஆகியோர் பாராட்டினர்.

The post சிபிஎஸ்சிஇ 10ம் வகுப்பு தேர்வில் விஜயமங்கலம் பாரதி பள்ளி சிறப்பிடம் appeared first on Dinakaran.

Related Stories: