பெருந்துறை விஜய்விகாஸ் பள்ளியில் கோடைகால பயிற்சி முகாம்

 

பவானி: பெருந்துறை அடுத்த கம்புளியாம்பட்டியில் உள்ள விஜய் விகாஸ் இண்டர்நேசனல் பள்ளியில் மாணவ, மாணவியருக்கான கோடைகால பயிற்சி முகாம் இரு வாரங்கள் நடைபெற்றது.மட்டைப் பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட வெளியரங்க விளையாட்டுகள், சதுரங்கம், யோகா, கையெழுத்து மற்றும் ஓவியப் பயிற்சி ஆகிய உள்ளரங்க விளையாட்டுகளுக்கான பயிற்சி அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களை மூலம் பயிற்றுவிக்கப்பட்டது.

இப்பயிற்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு விழாவில் பள்ளியின் பொருளாளர் தவமணி, சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.பள்ளியின் நிர்வாக இயக்குனர் ராஜசேகரன் வாழ்த்துரை வழங்கினார். பள்ளியின் துணை முதல்வர் சசிகலா மற்றும் மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

The post பெருந்துறை விஜய்விகாஸ் பள்ளியில் கோடைகால பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: