கர்நாடக சட்டமன்ற தேர்தல்: பாஜக அமைச்சர் சுதாகரை 11,159 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் 38 வயது இளைஞர் பிரதீப் ஈஸ்வர்..!!

பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக அமைச்சர் கே.சுதாகரை 11,159 வாக்குகள் வித்தியாசத்தில் 38 வயது இளைஞர் பிரதீப் ஈஸ்வர் தோற்கடித்துள்ளார். மருத்துவ படிப்பு மற்றும் இதர போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் நிலையத்தை இளைஞர் பிரதீப் ஈஸ்வர் நடத்தி வருகிறார். காங். சார்பில் போட்டியிட்ட பிரதீப், பாஜக அமைச்சரவையில் முக்கியமானவராக திகழ்ந்த சுதாகரை தோற்கடித்து சாதனை படைத்துள்ளார். சிக்கபல்லபூர் தொகுதியில் போட்டியிட்ட காங். வேட்பாளர் பிரதீப் 85,755 வாக்குகளும், அமைச்சர் சுதாகர் 74,596 வாக்குகளும் பெற்றனர்.

The post கர்நாடக சட்டமன்ற தேர்தல்: பாஜக அமைச்சர் சுதாகரை 11,159 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் 38 வயது இளைஞர் பிரதீப் ஈஸ்வர்..!! appeared first on Dinakaran.

Related Stories: