இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின்படி 127 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் கட்சியான பாஜக 68 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி 22 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில் பாஜகவின் கோட்டையாக கருதப்படும் குடகு மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் காங்கரஸ் முன்னிலை பெற்றுவருகிறது. தொண்டர்கள் இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். காங்கிரசின் வெற்றி பாஜகவிற்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
The post சரியும் பாஜகவின் கோட்டை: சாம்ராஜ் நகர், குடகு மாவட்டங்களை கைப்பற்றும் காங்கிரஸ்..தொண்டர்கள் உற்சாகம்..!! appeared first on Dinakaran.
