போலி ஆவணங்கள் மூலம் சிம் கார்டு பீகார், ஜார்க்கண்டில் 2.25 லட்சம் செல்போன் எண்கள் நீக்கம்

பாட்னா: பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் போலி ஆவணங்கள் மூலம் வாங்கப்பட்ட 2.25 லட்சம் செல்போன் எண்கள் செயலிழக்க செய்யப்பட்டுள்ளன. போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட செல்போன் எண்களை கண்டறிந்து அதனை செயலிழக்க செய்யும் நடவடிக்கைகளில் தொலைத்தொடர்புத்துறை ஈடுபட்டுள்ளது. அதன்ஒரு பகுதியாக பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் 2.25 லட்சம் செல்போன் எண்கள் செயலிழக்க செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து தொலைத்தொடர்புத்துறை சிறப்பு இயக்குநர் வௌியிட்ட அறிக்கையில், “2023 ஏப்ரல் மாதத்தில் மட்டும் பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் போலி ஆவணங்களை பயன்படுத்தி வாங்கப்பட்ட 2.25 லட்சம் செல்போன் எண்கள் நீக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு மாநிலங்களிலும் போலி ஆவணங்களை பெற்று கொண்டு சிம் கார்டுகளை விற்பனை செய்த 517 கடைகள் கண்டறியப்பட்டு, அந்த கடைகள் சிம் கார்டுகளை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டடுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post போலி ஆவணங்கள் மூலம் சிம் கார்டு பீகார், ஜார்க்கண்டில் 2.25 லட்சம் செல்போன் எண்கள் நீக்கம் appeared first on Dinakaran.

Related Stories: