தம்மம்பட்டி பேரூராட்சி தலைவருக்கு எதிராக 15 கவுன்சிலர்கள் மனு

 

சேலம்: சேலம் மாவட்டம் தம்மம்பட்டி சிறப்புநிலை பேரூராட்சியின் திமுக கவுன்சிலர்கள் 10 பேர், நடராஜன் என்பவர் தலைமையிலும், அதிமுக கவுன்சிலர்கள் புவனேஸ்வரி, லட்சுமி, சந்திரா, காங்கிரஸ் கவுன்சிலர்கள் திருச்செல்வன், செல்வி என 15 பேர் நேற்று, சேலம் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் அதிகாரிகளிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், தம்மம்பட்டி பேரூராட்சியின் தலைவராக உள்ள கவிதா முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார். பேரூராட்சி கூட்டத்தை சரியாக நடத்துவதில்லை. எனவே, தலைவர் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வரவேண்டும், எனக்கூறியிருந்தனர்.

பின்னர் அவர்கள் கூறுகையில், பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 கவுன்சிலர்களில் 15 பேர் தலைவர் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வரக்கோரி மனு அளித்துள்ளோம். அதனால், மாவட்ட கலெக்டர், பேரூராட்சி கூட்டத்தை கூட்டி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்திட உத்தரவிட வேண்டும், என்றனர்.

The post தம்மம்பட்டி பேரூராட்சி தலைவருக்கு எதிராக 15 கவுன்சிலர்கள் மனு appeared first on Dinakaran.

Related Stories: