கள்ளச் சந்தையில் விற்க முயன்ற 276 மது பாட்டில்கள் பறிமுதல்: பார் ஊழியர்கள் 4 பேர் கைது

அம்பத்தூர்: வில்லிவாக்கம் எம்.டி.எச் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில், இரவு நேரங்களில் கள்ளச் சந்தையில் மது விற்பதாக கொளத்தூர் துணை ஆணையருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு போலீசார் அந்த பாரில் சோதனை செய்தனர். அப்போது, கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்தது தெரிந்தது.

இதுதொடர்பாக, பார் ஊழியர்களான மாதவரம் பால் பண்ணையை சேர்ந்த தினேஷ் (29), ராமநாதபுரம் திருவாடானையை சேர்ந்த பாண்டி (33), திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த பெரியதுரை (28), சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த வின்சென்ட் (22) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 276 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post கள்ளச் சந்தையில் விற்க முயன்ற 276 மது பாட்டில்கள் பறிமுதல்: பார் ஊழியர்கள் 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: