சந்தான வேணுகோபால சுவாமி கோயில் கருட சேவை

பள்ளிப்பட்டு : திருத்தணி முருகன் கோயிலின் உப கோயிலாக விளங்குவது ஆர்.கே.பேட்டை அருகே எஸ்.வி.ஜி.புரம் கிராமத்தில் உள்ள சந்தான வேணுகோபால சுவாமி திருக்கோயில். இங்கு, சித்திரை பிரம்மோற்சவ விழா 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன. மேலும், தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் உற்சவர் வாகன சேவைகளில் எழுந்தருளி கிராம வீதிகளில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இந்த விழாவில் 6ம் நாளான நேற்றுமுன்தினம் இரவு சிறப்பு பெற்ற கருட சேவை நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சந்தான வேணுகோபால சுவாமிக்கு தீபாராதனை பூஜைகள் நடந்தது. இதனை தொடர்ந்து மேள தாளங்கள், வாண வேடிக்கை முழங்க திருவீதியுலா நடைபெற்றது. பெண்கள் தேங்காய் உடைத்து தீபாராதனை பூஜைகள் செய்து சுவாமியை வழிபட்டனர். கருட சேவை உற்சவ விழா உபயதாரர்களாக சிரஞ்சிவிலு, ஜானகிராமன், ஹரி, அய்யப்பா, பிரவீன் தேஜா ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

The post சந்தான வேணுகோபால சுவாமி கோயில் கருட சேவை appeared first on Dinakaran.

Related Stories: