கவுண்டமணி, செந்தில் சந்திப்பு போன்றது ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் சந்திப்பு: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..!!

சென்னை: ஓ.பி.எஸ்.க்கும், சசிகலாவுக்கும் அதிமுகவில் இடமில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

ஓபிஎஸ், டிடிவி தினகரன் சந்திப்பு 2 அமாவாசைகள் ஒன்று சேர்வது:

ஓ.பி.எஸ்.க்கும், சசிகலாவுக்கும் அதிமுகவில் இடமில்லை. ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் சந்திப்பு 2 அமாவாசைகள் ஒன்று சேர்வதாகும். டி.டி.வி.தினகரனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தது சந்தர்ப்பவாதம் என்று ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

கவுண்டமணி, செந்தில் போன்றது ஓபிஎஸ், டிடிவி தினகரன் சந்திப்பு:

கவுண்டமணி, செந்தில் சந்திப்பு போன்றது ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் சந்திப்பு. ஜெயலலிதா விவகாரத்தில் மாற்றி பேசியவர் ஓ.பன்னீர்செல்வம். முன்பு ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று கூறியவர் இப்போது சந்தேகம் இல்லை என்று கூறுகிறார் என ஜெயக்குமார் கூறினார்.

ஓபிஎஸ்-ஐ சேர்த்து கொள்ளும்படி பாஜக நிர்பந்திக்காது:

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக உள்ளது. பன்னீர்செல்வத்தை சேர்த்துக் கொள்ளும்படி பாஜக எங்களை நிர்பந்திக்காது. ஓபிஎஸ் – டிடிவி தினகரனை பாஜக சேர்த்து கொண்டாலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று ஜெயகுமார் தெரிவித்திருக்கிறார். டிடிவி தினகரன் சொல்வதையெல்லாம் நகைச்சுவையாகதான் எடுத்துக்கொள்வார்கள். விரைவில் ஓ.பன்னீர்செல்வத்தை டி.டி.வி.தினகரனும் கழற்றிவிடுவார் எனவும் தெரிவித்தார்.

ஓபிஎஸ்-டிடிவி இணைந்ததால் அதிமுகவுக்கு பாதிப்பில்லை:

ஓபிஎஸ்-டிடிவி தினகரன் இணைந்ததால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் தற்போது சின்னம்மா சின்னம்மா என்று பேசுகிறார். பன்னீர்செல்வத்தின் நடவடிக்கையால் அவரது ஆதரவாளர்கள் ஜே.சி.டி. பிரபாகர், வைத்திலிங்கம், மனோஜபாண்டியன் அதிருப்தியில் உள்ளனர். ஓபிஎஸ், சசிகலா, தினகரனை தவிர வேறு யார் வந்தாலும் அதிமுகவில் சேர்ப்பது பற்றி கட்சி முடிவு செய்யும் என ஜெயக்குமார் தனது பேட்டியில் கூறினார்.

The post கவுண்டமணி, செந்தில் சந்திப்பு போன்றது ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் சந்திப்பு: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..!! appeared first on Dinakaran.

Related Stories: