ஜப்பான்- தமிழ்நாடு உறவை மேலும் வலுப்படுத்த பயணம் மேற்கொள்ள உள்ளேன்: மிட்சுபிஷி ஏசி தொழிற்ச்சாலை அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் உரை

சென்னை: மிட்சுபிஷி எலக்ட்ரிக் நிறுவனம் ரூ.1,891 கோடி முதலீட்டில் சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகா பெருவாயல் கிராமத்தில் உள்ள மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி டெவலப்பர்களின் தொழிற்பேட்டையில் ஏர் கண்டிஷனர்கள் மற்றும் கம்ப்ரசர்களை தயாரிக்கும் ஆலையை அமைக்க உள்ளது. இந்த புதிய தொழிற்சாலையானது மிட்சுபிஷி எலக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் ஏர் கண்டிஷனர்கள் மற்றும் கம்ப்ரசர்கள் தயாரிக்கும் இந்தியாவின் தொழிற்சாலையாகும். இந்த தொழிற்சாலை உள்நாட்டு சந்தையில் அதிகரித்து வரும் ஏர் கண்டிஷனர் தேவையை பூர்த்தி செய்யும் மற்றும் 2025ம் ஆண்டு அக்டோபருக்குள் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை அருகே மிட்சுபிஷி நிறுவனத்தின் ஏசி உற்பத்தி ஆலை 1,891 கோடி ரூபாய் மதிப்பில் தொழிற்ச்சாலை அமைகிறது. முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.ஏசி உற்பத்தி ஆலை வருவதால் 2,000 பேருக்கு வேலை கிடைக்கும். 60 சதவீதத்திற்கு அதிகமான மகளிருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கும்மிடிப்பூண்டி தாலுகா பெருவயல் கிராமத்தில் ஏ.சி தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. ஏசி உற்பத்தி ஆலைக்கு மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் .

100 சதவீதம் நேரடி முதலீட்டின் மூலம் இந்தியாவில் மிட்சுபிஷியின் முதல் ஏசி ஆலை அமைக்கப்பட உள்ளது. பெறுவயலில் 2025-க்குள் 52.4 ஏக்கரில் அமையும் ஏ.சி தொழிற்சாலை மூலம் 2004 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மின்சார வாகன தயாரிப்பில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

* மு.க.ஸ்டாலின் உரை

220 ஒப்பந்தந்தங்கள் மூலம் ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. வரும் 23-ம் தேதி ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்ளயுள்ளார். ஏற்றுமதி மேம்பாட்டுக்காக தமிழ்நாடு அரசு பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது. ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளில் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தொழிற்சாலை சார்ந்த நிகழ்ச்சிகளில் நான் அதிகம் கலந்துகொண்டுள்ளேன். பெண்களின் நலன் பேணுவதில் அதிகம் கவனம் தமிழ்நாடு அரசு செலுத்துகிறது. தெற்காசிய அளவிலா முதலாய்டுகளை ஈர்த்திட சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்க பெரும் முயற்சி எடுத்து வருகிறோம். ஜப்பான் இந்தியா முதலீடு மேம்பட்டு கூட்டமைப்பு திட்டத்தின் கீழ் 3 நகரியங்கள் தமிழ்நாட்டில் உள்ளது. ஜப்பான்- தமிழ்நாடு உறவை மேலும் வலுப்படுத்த பயணம் மேற்கொள்ள உள்ளேன்.

The post ஜப்பான்- தமிழ்நாடு உறவை மேலும் வலுப்படுத்த பயணம் மேற்கொள்ள உள்ளேன்: மிட்சுபிஷி ஏசி தொழிற்ச்சாலை அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் உரை appeared first on Dinakaran.

Related Stories: