பாரீஸில் நடந்த வண்ணமிகு விழாவில் பிரபலங்கள் பங்கேற்பு: மெஸ்ஸி, ஷெல்லி ஆன் பிரேசருக்கு “லாரஸ்” விளையாட்டு விருது

பாரீஸ்: லாரஸ் விருத்தளிப்பு விழாவில் ஆண்டின் சிறந்த வீரராக கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியம், சிறந்த வீராங்கனையாக ஓட்டப்பந்தய புகழில் ஷெல்லிஆன்பிரேசரும் தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். விளையாட்டு உலகில் கௌரவமிக்க விருதுகளில் ஒன்று லாரஸ் விளையாட்டு விருது. இந்த ஆண்டு விருதளிப்பு விழா பாரீஸில் நேற்றிரவு நடைபெற்றது.

விளையாட்டு பிரபலங்கள் பலர் குழுமி இருந்த அறையில் ஆண்டின் சிறந்த வீரராக அர்ஜென்டீனாவை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸியும், சிறந்த வீராங்கனையாக ஜமைக்காவை சேர்ந்த ஓட்ட பந்தய புகழ் ஷெல்லிஅன்பிரேசரும் தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். சிறந்த அணியாக உலகக்கோப்பையை வென்ற அர்ஜென்டீனா கால்பந்தனி தேர்வு செய்யப்பட்டது.

இதற்கான விருதையும் மெஸ்ஸி பெற்றுக்கொண்டார். US ஓபன் பட்டத்தை இளம் வயதில் வென்று டென்னிஸில் கலக்கிவரும் கார்லோஸ் அல்காரஸ் உலகின் திருப்புமுனை வீரருக்கான விருதை பெற்றார். இதே போன்று உலக ஆக்ஷன் பட்டத்தை சீனாவை சேர்ந்த பனிச்சறுக்கு வீராங்கனை எலைன் குஸ் மிடுக்கு நடையுடன் பெற்றுக்கொண்டார்.

2021ல் யூரோப் ஜாம்பியன் கால்பந்து போட்டியின் போது மாரடைப்பால் மைதானத்தில் சுருண்டு விழுந்து பின்னர் மருத்துவமனையில் மீண்டெழுந்து டென்மார்க் வீரர் கிறிஸ்டின் எலிக்ஸர் ஆண்டின் சிறந்த கம்பாக் வீரராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது அரங்கமே கரவொளி எழுப்பி அவரை அங்கீகரித்தது. லாரஸ் விருது கடந்த 1999ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

The post பாரீஸில் நடந்த வண்ணமிகு விழாவில் பிரபலங்கள் பங்கேற்பு: மெஸ்ஸி, ஷெல்லி ஆன் பிரேசருக்கு “லாரஸ்” விளையாட்டு விருது appeared first on Dinakaran.

Related Stories: