மருத்துவ துறை சார்ந்த கல்வி சேவையில், தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக திறம்பட செயலாற்றி வரும், விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகம், சென்னை ஆறுபடை வீடு தொழிற்நுட்ப கல்லூரி வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைகளின் சிறப்பம்சம் குறித்து, துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் கூறியதாவது:
பள்ளி கல்வியை முடித்துள்ள மாணவர்களுக்கு, உயர்கல்வி வாயிலாக சிறந்த வேலை வாய்ப்பினை வழங்கும் மருத்துவ துறை சார்ந்த படிப்புகளை, தகுதி மிக்க பேராசிரியர்களை கொண்டு சிறப்பான முறையில் வழங்கி வருகிறோம். அதற்கு சான்றாக, தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (NAAC) மூலம் ‘ஏ’ தரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தரக்கட்டுப்பாட்டு அமைப்பால் (QCI) அங்கீகரிக்கப்பட்ட தெற்கு ஆசியாவின் TUV – SUD அமைப்பானது, எங்களின் கல்வி தரத்தை ஆராய்ந்து, சர்வதேச தரநிலை மேலாண்மை (ISO 21001: 2018) மறு சான்றிதழினையும் வழங்கியுள்ளது. இந்தியாவில் இத்தரசான்றிதழினை பெற்ற முதல் கல்லூரி ஆகும்.
துறையின் மூலம் மயக்க மருந்தியல், இருதய பரிசோதனை பிரிவு, மருத்துவ ஆய்வக பிரிவு, கண் ஒளியியல் பிரிவு, அறுவை அரங்க பிரிவு, நரம்பியல் பிரிவு, கதிரியக்க பிரிவு, கதிரியக்க சிகிச்சை பிரிவு, இருதய அறுவை சிகிச்சை பிரிவு, தடய அறிவியல் பிரிவு, மருத்துவ உதவியாளர் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, ரத்த சுத்திகரிப்பு பிரிவு போன்ற இளங்கலை பட்டய படிப்புகளும், அதனை சார்ந்த முதுகலை படிப்புகளும் வழங்கப்பட்டு வருகிறது. டிஜிட்டல் தொழிற்நுட்பம் சார்ந்த நூலக வசதி, தனிப்பட்ட பயிற்சி வகுப்புகள் மற்றும் அதற்கான ஆய்வக வசதிகள் போன்றவற்றை சிறந்த முறையில் அளித்து வருகிறோம். மருத்துவ துறை சார்ந்த பயிற்சிக்காக, இந்தியாவிலுள்ள பல்வேறு சிறந்த மருத்துவமனைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, பயிற்சி வாய்ப்பினை வழங்கிறோம். மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல் மருத்துவ துறை சார்ந்த மென்பொருள் நிறுவனங்களில், வளாகத் தேர்வு மூலம் வேலை வாய்ப்பினை வழங்குகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post சிறந்த மருத்துவ துறை சார்ந்த கல்விக்கு விநாயகா மிஷனின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை appeared first on Dinakaran.
