திகார் சிறையில் தாதா கொலை விவகாரம்: தமிழ்நாடு போலீசார் 7 பேர் சஸ்பெண்ட்.! டெல்லி சிறைத்துறை நடவடிக்கை

புதுடெல்லி: திகார் சிறையில் தாதா தில்லு தாஜ்பூரியா அடித்து கொல்லப்பட்ட விசயத்தில் பணியில் அலட்சியமாக செயல்பட்ட 7 தமிழ்நாடு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தாதா தில்லு தாஜ்பூரியா என்பவரை, சிறையில் இருந்த மற்றொரு தாதா கும்பல் சிறைக்குள்ளேயே அடித்துக் கொன்றது. சம்பவம் நடந்த போது திகார் சிறையில் பாதுகாப்பு பணியில் இருந்த 7 தமிழக சிறப்பு காவல் படை போலீசார், பணியில் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் தில்லு தாஜ்பூரியாவை அடித்துக் கொல்லும் போது அவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு மவுனமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சிசிடிவி வீடியோ காட்சிகளின் ஆதரங்களின்படி மேற்கண்ட 7 போலீசார் மீதும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தில்லு தாஜ்பூரியாவை சக கைதிகள் அடித்துக் கொல்லும் போது, தமிழக சிறப்பு காவல் படை போலீசார் 7 பேரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அதனால் அவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். இவ்விவகாரம் தொடர்பாக தமிழக காவல் துறைக்கு டெல்லி சிறைத்துறை டிஜிபி சஞ்சய் பெனிவால் கடிதம் எழுதியுள்ளார்’ என்று அவர்கள் கூறினர்.

The post திகார் சிறையில் தாதா கொலை விவகாரம்: தமிழ்நாடு போலீசார் 7 பேர் சஸ்பெண்ட்.! டெல்லி சிறைத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: