சித்ரா பௌர்ணமியையொட்டி சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் சண்டி மஞ்சரி ஹோமம்

பெரம்பலூர், மே 5: பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர்  மதுரகாளியம்மன் கோயிலில் 13ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி திருவிழா நேற்று (4ம் தேதி) தொடங்கியது. பெரம்பலூர்அருகே சிறுவாச்சூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள அருள் மிகு  மதுர காளியம்மன் திருக்கோவில் உள்ளது. பெரம்பலூர் மாவட்ட சுற்றுலாத்தல அந்தஸ்து கொண்ட இக்கோவிலில் தங்கத்தேர் உள்ளது. 21 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஏப்ரல் 5ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து, மண்டல பூஜைகள் நடை பெற்று வருகிறது. பில்லி சூனியம், ஏவல், மாந்திரீக கட்டுகளை அவிழ்த்து, பக்தர்களுக்கு வேண்டும்வரம் அளிப்பதோடு, குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் அளிக்கக்கூ டிய பிரசித்திபெற்ற இக்கோவிலில், 13 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி 2நாள் திருவிழா நேற்று (4ம்தேதி) தொடங்கியது.

சென்னை, கோட்டூரில் இய ங்கி வரும் மஹா மேரு மண்டலி என்ற ஸ்தாபனம் வித்யா உபாசனையை ஊக்குவித்து வருகிறது. இதன் நிறுவனர்  மதுராம்பிகானந்த ப்ரஹ் மேந்திர ஸரஸ்வதி அவதூத ஸ்வாமிகளாவார். மஹா மேரு மண்டலி கடந்த 13 ஆண்டுகளாக பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம் மன் திருக்கோவிலில் சித் ரா பௌர்ணமியின் போது  சண்டிஹோமமும், அக ண்ட லலிதா ஸஹஸ்ர நாம குங்குமார்ச்சனையும் சிறப்பு அபிஷேக ஆராத னைகளையும் நடத்தி வரு கிறது.

இந்த ஆண்டும்  மகா மேரு மண்டலி சார்பில் நேற்று (4ம் தேதி) வியாழக் கிழமை காலை 8 மணி முதல் மாலை 3மணி வரை  மகாமேரு மண்டலி நிர்வாக அறங்காவலர் சுப்ரமணியம் தலைமையில் சண்டி மஞ்சரி ஹோமம் நடைபெற்றது. இதில் சிறுவாச்சூர் மற்றும் பெரம்பலூர், செல்லியம்பாளையம், விளாமுத்தூர், நெடுவாசல், அய்யலூர், விஜயகோபால புரம், மருதடி, புதுநடுவலூர், நொச்சியம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த  சண்டி மஞ்சரி ஹோமத்தில் கலந் துகொண்டு அம்மனை பக் தியுடன் வழிபட்டுச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து இன்று (5ம் தேதி) காலை 6.30 மணிமுதல் 7.30 மணிவரை  குருவுக்கு பாத பூஜை நடைபெறுகிறது. 8 மணி முதல் 11 மணி வரை  நவாவரண பூஜை மற்றும்  நவாவரண ஹோமம் ஆகியவற்றுடன், காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை 350 மகளிரால் அக ண்ட  லலிதா ஸஹஸ்ர நாம குங்குமார்ச்சனையும்,  மஹா மேருமண்டலியினரால் நடைபெற உள்ளது.

The post சித்ரா பௌர்ணமியையொட்டி சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் சண்டி மஞ்சரி ஹோமம் appeared first on Dinakaran.

Related Stories: