வாடிவாசல் தடுப்பு கட்டையில் முட்டியதில்மாஜி அமைச்சரின் ஜல்லிகட்டு காளை சாவு

விராலிமலை: புதுக்கோட்டை அருகே வாடிவாசல் தடுப்பு கட்டையில் முட்டியதில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரின் ஜல்லிக்கட்டு காளை உயிரிழந்தது. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சேர்ந்தவர். ஜல்லிக்கட்டு ஆர்வலரான இவர், ராப்பூசல் அருகே ஓலைமான்பட்டியில் உள்ள தோட்டத்தில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். கடந்த 2ம்தேதி வடசேரி பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் அவரது கருப்பு கொம்பன் காளையும் பங்கேற்றது. அப்போது வாடிவாசலில் நடப்பட்டிருந்த தடுப்பு கட்டையில் முட்டியதில் மைதானத்திலேயே மயங்கி விழுந்தது.

ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காளை நேற்று காலை இறந்தது. இதையடுத்து ராப்பூசலில் உள்ள தோட்டத்துக்கு கொண்டு வரப்பட்ட காளைக்கு, விஜயபாஸ்கர் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து ஜல்லிக்கட்டு வீரர்களும் காளைக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் தோட்டத்தில் காளையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதேபோல விஜயபாஸ்கரின் கொம்பன் காளை 2019ல் திருநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசல் தடுப்பு கட்டையில் முட்டி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

The post வாடிவாசல் தடுப்பு கட்டையில் முட்டியதில்மாஜி அமைச்சரின் ஜல்லிகட்டு காளை சாவு appeared first on Dinakaran.

Related Stories: