குளிர்பான கடைகளில் அலுவலர்கள் ஆய்வு

காரிமங்கலம், மே 5: தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர்.பானு சுஜாதா மேற்பார்வையில், பாலக்கோடு, காரிமங்கலம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தலைமையில், அலுவலர்கள் காரிமங்கலம், அனுமந்தபுரம், பொம்மஅல்லி, பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள குளிர்பான கடைகள் மற்றும் ஓட்டல்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஒரு சில கடைகளில் காலாவதியான குளிர்பானம் மற்றும் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

மேலும், குளிர்பானம் மற்றும் குடிநீர் பாட்டில்கள் தயாரிப்பு தேதி நேரம் மற்றும் காலாவதியாகும் தேதி பொறிக்கப்பட்ட ஐஎஸ்ஐ முத்திரை உள்ள குடிநீர் பாட்டில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும், தயாரிப்பு தேதி முகவரி இல்லாமல் குளிர்பானங்கள் மற்றும் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதேபோல், ஓட்டல்கள், பேக்கரி ஆகியவற்றில் தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட எண்ணெய் மீண்டும் பயன்படுத்தாமல் உணவு தயாரிக்கவும், பணியாளர்கள் தலை மற்றும் கைகளில் அதற்குரிய கையுறை, தலை உறையை பயன்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

The post குளிர்பான கடைகளில் அலுவலர்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: