பைக் திருட்டில் ஈடுபட்ட அண்ணன், தம்பி கைது

பெரம்பூர்: கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 39வது தெரு, 2வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் சம்சுதீன் (27). இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே தனது பைக்கை நிறுத்தி இருந்தார். நேற்று காலை வந்து பார்த்தபோது அவரது பைக் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கொடுங்கையூர் குற்றப்பிரிவில் சம்சுதீன் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், கொடுங்கையூர் திருவள்ளுவர் சாலையை சேர்ந்த விக்னேஷ் (எ) விக்ரம் (31), அவரது தம்பி விக்னேஷ் (எ) சின்னராசு (24) ஆகியோர் பைக்கை திருடியது தெரிந்தது. அவர்களை கைது செய்தனர். இதில் விக்ரம் மீது மணலி, கொடுங்கையூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 17க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இதேபோன்று இவரது தம்பி சின்னராசு மீது மணலி, மாதவரம், கொடுங்கையூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 7க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இதனையடுத்து திருடு போன பைக்கை பறிமுதல் செய்த போலீசார், அண்ணன் தம்பி இருவரையும் சிறையில் அடைத்தனர்.

The post பைக் திருட்டில் ஈடுபட்ட அண்ணன், தம்பி கைது appeared first on Dinakaran.

Related Stories: