கோவை மாநகராட்சியில் அதிமுக ஆட்சியில் ரோடு போடாமலே போட்டதாக ரூ.1.82 கோடி ஊழல்

கோவை: கோவை மாநகராட்சியில் கடந்த அதிமுக ஆட்சியில் ரோடுகள் போடாமலே ரூ.1.82 லட்சத்துக்கு ரோடு போட்டதாக பதிவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.கோவை மாநகராட்சியில் 2019-20ல் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் வடக்கு மண்டலத்துக்குட்பட்ட 38, 39, 40, 44 ஆகிய வார்டுகளில் 16 ரோடுகளை சீரமைக்க ரூ.1.98 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அந்த பணிகள் முடிவு பெற்றதாகவும், ரூ.1.82 கோடி பணம் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சியின் எம். புத்தகத்தில் தகவல் பதிவிடப்பட்டுள்ளது.

பீளமேடு, ஆவாரம்பாளையம், நல்லாம்பாளையம் பகுதிகளில் இந்த ரோடுகள் அமைந்துள்ளன. சமூக அலுவலர்கள் இந்த 16 ரோடுகளை ஆய்வு செய்தபோது எந்த ரோடுமே சீரமைக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் இந்த ஊழலை நடந்துள்ளது என கூறப்படுகிறது. இது குறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறுகையில், இந்த புகார் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. இதில், பணம் செலவு செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட ரோடுகள் போடப்படவில்லை. இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

The post கோவை மாநகராட்சியில் அதிமுக ஆட்சியில் ரோடு போடாமலே போட்டதாக ரூ.1.82 கோடி ஊழல் appeared first on Dinakaran.

Related Stories: