ஒன்றிய அரசின் எஸ்எஸ்சி தேர்வுக்கு நான் முதல்வன் திட்டத்தில் இலவச பயிற்சி

 

ஈரோடு: ஒன்றிய அரசின் எஸ்எஸ்சி தேர்வுக்கு நான் முதல்வன் திட்டத்தில் ஈரோட்டில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதுகுறித்து ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வாயிலாக பல்வேறு துறைகளிலுள்ள அசிஸ்டென்ட் ஆடிட் அதிகாரி, அசிஸ்டென்ட் அக்கவுண்ட் அதிகாரி, அசிஸ்டென்ட் செக்சன் அதிகாரி, இன்ஸ்பெக்டர் ஆப் இன்கம்டெக்ஸ் அதிகாரி, சிபிஐ-எஸ்ஐ போன்ற காலிப்பணியிடங்களுக்கான (தோராயமாக 7,500) தேர்வு அறிவிக்கை இன்று (3ம் தேதி) வெளியிடப்பட உள்ளது.

இத்தேர்வுக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு ஓசி பிரிவாக இருந்தால் 18-27 வயது, ஓபிசி பிரிவுக்கு 18-30 வயது, எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவுகளுக்கு 18-32 வயதாகும். தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் http//ssc.nic.in என்ற இணையதளத்தில் வருகிற ஜூன் மாதம் 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்வுக்கு ‘நான் முதல்வன்’ திட்டத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் விரைவில் நடைபெற உள்ளது.

இப்பயிற்சி வகுப்பிற்கான விழிப்புணர்வு முகாம் மற்றும் முன்பதிவு கூட்டம் நாளை (4ம் தேதி) காலை 10 மணிக்கு ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றம் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. தேர்வினை எழுத தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக 0424-2275860, 95788 87714, 94990 55943 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எனவே, இந்த வாய்ப்பினை மாவட்டத்தை சேர்ந்த ஆண், பெண் இருபாலரும் பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

The post ஒன்றிய அரசின் எஸ்எஸ்சி தேர்வுக்கு நான் முதல்வன் திட்டத்தில் இலவச பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: