எல்ஆர்ஜி அரசு கல்லூரியில் வாசிப்பு இயக்கம் துவக்கம்

திருப்பூர், ஏப்.30: உலக புத்தக தினத்தை முன்னிட்டு, திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்கல்லூரியில், கல்லூரி நூலகம் மற்றும் தகவல் அறிவியல் மேம்பாட்டு அமைப்பு சார்பில், ‘தமிழ்நாடு வாசிப்பு இயக்கம்’ துவங்கப்பட்டது. டிகேடி கல்வி குழுமங்களின் செயலாளர் சகிலா பர்வீன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, வாசிப்பு பழக்கத்தின் முக்கியத்துவத்தை மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியின் நிறைவில் மாணவிகள் அனைவரும் 15 நிமிடம் நூல் வாசித்து, அதன் மூலம் அறிந்து கொண்டதை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து ‘தினமும் 15 நிமிடங்கள் புத்தகம் வாசிப்போம்’ என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பேரவை தலைவி ரித்திகா நன்றி கூறினார்.

The post எல்ஆர்ஜி அரசு கல்லூரியில் வாசிப்பு இயக்கம் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: