இந்நிலையில் கிருத்திகாவின் தந்தை கடத்தல் வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் கிருத்திகாவை நீதிமன்றத்தில் அவரது குடும்பத்தினர் ஆஜர்படுத்தினர். கோர்ட் உத்தரவுப்படி கிருத்திகாவை காப்பகத்தில் தங்க வைத்து வாக்குமூலம் பெறப்பட்டது. பின்னர் அவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த சூழலில் விசாரணைக்கு கிருத்திகா ஆஜராகவில்லை. இதனால் கிருத்திகாவின் தந்தை நவீன் படேலை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து குற்றாலம் போலீசார், குஜராத்தில் தங்கி இருந்த நவீன் படேலை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரை விமானத்தில் திருவனந்தபுரம் அழைத்து வந்தனர். பின்னர் நேற்று மதியம் குற்றாலம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கிருத்திகாவும் உடன் வந்திருந்தார்.
The post காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் வழக்கு தந்தை குஜராத்தில் கைது: குற்றாலம் போலீசார் அதிரடி appeared first on Dinakaran.
