கந்தர்வகோட்டை அருகே வெள்ளாளவிடுதியில் பூத்துக் குலுங்கும் செண்டி பூக்கள்

கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே வெள்ளாளவிடுதி கிராமத்தில் பயிரிடப்பட்ட செண்டி பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் வெள்ளாளவிடுதி கிராமத்தில் விவசாயிகள் செண்டி பூ பயிர் செய்துள்ளனர். மலர் சாகுபடியை பொருத்தவரை லாபகரமான பயிராக இருந்தாலும் விவசாய பணி என்பது சற்று கடினமான சூழ்நிலையில் தான் இருக்கும் என்று கூறுகிறார்கள்.

பூக்கள் நிறைய இருக்கும் நிலையில் விலை குறைவாகவும் விளைச்சல் குறைந்த நிலையில் இருக்கும் போது விலை கூடுதலாக இருக்கும் என கூறுகிறார்கள்.இப்பகுதியில் மலர்கள் அதிக அளவில் பயிர் செய்வதால் அரசு வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று உருவாக்கினால் மலர்களின் விலை ஒரே நிர்ணயமாக இருக்கும் என்கின்றனர் விவசாயிகள்.

மேலும் வேளாண்மை துறையைச் சார்ந்த அதிகாரிகள் விவசாயிகளுக்கு மலர் விவசாயத்தைப் பற்றி தகுந்த அறிவுரையும் ,ஆலோசனையும் வழங்கி மலர் விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றும் ஆழ்துளை கிணறு இல்லாமல் தரை கிணற்றில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும் என்பதே மலர் சாகுபடி விவசாயிகளின் கோரிக்கையாகும்.

The post கந்தர்வகோட்டை அருகே வெள்ளாளவிடுதியில் பூத்துக் குலுங்கும் செண்டி பூக்கள் appeared first on Dinakaran.

Related Stories: