சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவே கலைஞர் பேனா நினைவுச் சின்னத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி!

சென்னை: சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவே கலைஞர் பேனா நினைவுச் சின்னத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்காக ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் தமிழ்நாடு அரசு அனுமதி கோரியிருந்தது. ஈற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையுடன் தாக்கல் செய்த தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை ஒன்றிய அரசு ஏற்றுள்ளது. வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட ‘பேனா’ நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நினைவு சின்னம் அமைக்க ஒன்றிய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. இதில் ஒன்றிய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அண்மையில் பொதுமக்களிடம் தமிழ்நாடு அரசு கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது.

இதைத்தொடர்ந்து பேனா நினைவு சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்க கோரி ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பியுள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை, ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழுவிடம் தமிழ்நாடு பொதுப்பணித்துறை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் பேனா நினைவு சின்னத்துக்கு ஒப்புதல் வழங்க தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில், பேனா நினைவு சின்னம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

The post சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவே கலைஞர் பேனா நினைவுச் சின்னத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி! appeared first on Dinakaran.

Related Stories: