இடையார் ஊராட்சி அரசு பள்ளியில் கல்வி இணை செயல்பாடு போட்டி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு

 

ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம், இடையார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பும், மாணவர்கள் சேர்க்கை பேரணி நடைபெற்றது. பேரணியை ஜெயங்கொண்டம் வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி தலைமையேற்று கொடியசைத்து துவக்கிவைத்து வாழ்த்தி பேசினார். மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளி கொணரும் வகையில் தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கல்வி இணை செயல்பாடு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

ஆசிரியர் பயிற்றுநர் தாமோதரன், ஊராட்சி மன்ற தலைவர் ஜயப்பன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மல்லிகா, சக்திகுமார், பள்ளி மேலாண்மை குழு தலைவி ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் தங்கையன் வரவேற்றார். இதில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர் மதலைராஜ் பரிசளித்து வாழ்த்தினார்.

ஆங்கில பட்டதாரி ஆசிரியர் சந்திரகுமார் நிகழ்ச்சி தொகுப்பாளராக செயலாற்றினார். சாதனை மாணவர்களை புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செங்குட்டுவன் வாழ்த்துரை வழங்கி, போட்டிகளில் வெற்றிபெறும் நுட்பங்களை கூறினார். பள்ளி ஆசிரியர்கள் மோகன்தாஸ், சாந்தி, உமாமகேஸ்வரி ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். சத்துணவு அமைப்பாளர், கிராம பொதுமக்கள், பெற்றோர்கள், பள்ளி மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் கணித பட்டதாரி ஆசிரியர் சிவகுமார் நன்றி கூறினார்.

The post இடையார் ஊராட்சி அரசு பள்ளியில் கல்வி இணை செயல்பாடு போட்டி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு appeared first on Dinakaran.

Related Stories: