சித்திரை திருவிழா 4ம் நாள்: மீனாட்சியம்மன், சுவாமி தங்கப் பல்லக்கில் பவனி

இன்று வேடர் பறி லீலை திருவிளையாடல்

மதுரை சித்திரை திருவிழாவின் 4ம் நாளான நேற்று காலை 9 மணிக்கு, மீனாட்சி, பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் தங்கப்பல்லக்கில் கோயிலில் இருந்து புறப்பட்டு, தெற்குவாசல், சின்னக்கடை வீதி வழியாக வில்லாபுரத்தில் உள்ள பாவக்காய் மண்டபத்திற்கு சென்றனர். வில்லாபுரம் கண்மாய் பகுதியில் அக்காலத்தில் பாவக்காய் தோட்டம் இருந்துள்ளது.

விவசாயிகளுக்கு தரிசனம் கொடுக்கவும், அப்பகுதி மக்கள் விழா எடுப்பதற்காகவும், பாவக்காய் பயிரிடப்பட்ட தோட்டத்தில் பாவக்காய் மண்டபத்தில் அம்மனும், சுவாமியும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் மாலை 6 மணிக்கு வில்லாபுரத்தில் இருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டு, சித்திரை வீதிகளில் பவனி வந்து அம்மனும், சுவாமியும் கோயிலுக்கு வந்து சேர்ந்தனர்.

விழாவின் 5ம் நாளான இன்று (ஏப். 27) சுவாமி, பிரியாவிடை, அம்மன் தங்கச்சப்பரத்தில் மாசி வீதிகளில் காலை 9 மணியளவில் வலம் வருகின்றனர். வடக்கு மாசி வீதி, ராமராயணச்சாவடி மண்டகப்படியில் எழுந்தருளுகின்றனர். தொடர்ந்து இரவு 7 மணிக்கு சுவாமி, பிரியாவிடை ஒரு தங்கக்குதிரை வாகனத்திலும், மற்றொரு வாகனத்தில் அம்மனும் வலம் வருகின்றனர். வடக்கு மாசி வீதி, கீழ மாசி வீதி, அம்மன் சன்னதி வழியாக கோயிலுக்கு வந்தடைகின்றனர். கோயிலுக்குள் இருக்கும் மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் இரவு 9.30 மணிக்கு வேடர் பறி லீலை திருவிளையாடல் நடைபெற உள்ளது.

The post சித்திரை திருவிழா 4ம் நாள்: மீனாட்சியம்மன், சுவாமி தங்கப் பல்லக்கில் பவனி appeared first on Dinakaran.

Related Stories: