பிஷப் கூட்டத்தில் பெண்கள் வாக்களிக்க போப் ஒப்புதல்

வாடிகன்: கத்தோலிக்க திருச்சபை வரலாற்றில் முதல் முறையாக ஆயர் கூட்டத்தில் பெண்கள் வாக்களிக்க போப் பிரான்சிஸ் ஒப்புதல் அளித்துள்ளார். திருச்சபை விவகாரங்களில் முடிவு எடுக்கும் அதிகாரம் இதுவரை கர்தினால்கள், ஆயர்கள், குருக்களிடம் மட்டுமே இருந்து வந்தது. இந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி சில திருத்தங்களுடன் இதற்கான புதிய விதிகளை போப் பிரான்சிஸ் வாடிகனில் நேற்று வெளியிட்டார்.

அதில் பல ஆண்டுகளாக பிஷப் கூட்டத்தில் பெண்கள் வாக்களிக்கும் உரிமை கோரப்பட்டு வந்தது. அதன் அடிப்படையில், வரும் அக்டோபர் மாதம் நடக்க இருக்கும் ஆயர்கள் கூட்டத்தில் அவர்கள் வாக்களிக்க போப் பிரான்சிஸ் ஒப்புதல் அளித்துள்ளார், என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், கத்தோலிக்க திருச்சபையில் பெண்களுக்கு அதிக முடிவெடுக்கும் பொறுப்புகளை போப் பிரான்சிஸ் வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

The post பிஷப் கூட்டத்தில் பெண்கள் வாக்களிக்க போப் ஒப்புதல் appeared first on Dinakaran.

Related Stories: