கேரளாவில் பிரதமர் துவங்கி வைத்த வந்தே பாரத் ரயில் கூரையில் நீர்க்கசிவு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம்- காசர்கோடு இடையே புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். அதன் பிறகு இந்த ரயில் காசர்கோடு வரை இயக்கப்பட்டது. பின்னர் தண்ணீர் நிரப்புவதற்காக ரயில் கண்ணூருக்கு கொண்டுவரப்பட்டது. அன்று இரவு கண்ணூரில் பலத்த மழை பெய்தது. நேற்று காலை ஊழியர்கள் பராமரிப்பு பணிக்காக சென்றபோது ஒரு பெட்டியில் மழை நீர் கசிந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக ரயில்வே உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள் நடத்திய பரிசோதனையில் குறிப்பிட்ட அந்த பெட்டியின் மேல் கூரையில் லேசான விரிசல் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அதை சீரமைக்கும் பணி உடனடியாக தொடங்கப்பட்டது.

ரயிலில் ஒட்டப்பட்ட எம்பியின் போஸ்டர்: வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பாலக்காடு மாவட்டம சொரணூரில் முதலில் ஸ்டாப் அனுமதிக்கப்பட வில்லை. பின்னர், பாலக்காடு எம்.பி ஸ்ரீகண்டன் போராட்ட அறிவிப்பு காரணமாக நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இந்த ரயில் சொரணூருக்கு வந்தபோது காங்கிரஸ் தொண்டர்கள் ஸ்ரீகண்டன் எம்பிக்கு வாழ்த்து தெரிவித்து அவரது போஸ்டர்களை ரயிலில் ஒட்டினர். இது தொடர்பாக சொரணூர் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post கேரளாவில் பிரதமர் துவங்கி வைத்த வந்தே பாரத் ரயில் கூரையில் நீர்க்கசிவு appeared first on Dinakaran.

Related Stories: