தா.பழூரில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு

 

தா.பழூர், ஏப் .26:அரியலூர் மாவட்டம் தா.பழூர் கிழக்கு ஒன்றியத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சி அரியலூர் மாவட்ட கழக செயலாளரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான சிவசங்கரின் ஆலோசனையின் படி, ஒன்றிய கழக செயலாளரும்,சட்டமன்ற உறுப்பினருமான க.சொ.க.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக, ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர், கழக கொள்கைப் பரப்புக்குழு செயலாளர் சபாபதி மோகன் கலந்துகொண்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாக திமுக கொடியினை ஏற்றினார்.

பின்னர் ஒன்றிய அலுவலக முகப்பு பகுதியில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார். இதில் கடைவீதியில் இருந்த பொதுமக்கள் தாகத்தை தணிக்கும் வகையில் நீர் மோர், இளநீர், வெள்ளரி, தர்பூசணி உள்ளிட்டவை வழங்கப்பட்டது. அப்பொழுது பேருந்து நிறுத்தத்தில் நின்ற பேருந்தில் பயணித்த பயணிகளின் களைப்பை போக்கும் வகையில் பேருந்தில் ஏறி ஓட்டுநர் நடத்துநர் மற்றும் பயணிகளுக்கு நீர் மோர் மற்றும் தர்பூசணி வழங்கப்பட்டது. மேலும் தா.பழூர் கிழக்கு ஒன்றியம், சிந்தாமணி, இருகையூர், காரைக்குறிச்சி, வாழைக்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், மற்றும் கழக முன்னோடிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

The post தா.பழூரில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: